கோவை: கோவையில் நேற்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அளித்த பேட்டி: பெண்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக உள்ள பாலியல் பிரச்னைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தியா அதற்கு உறுதி எடுத்து கொள்ள வேண்டும். கூலி தொழிலாளி பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் என்று அனைவரின் பாதுகாப்பிற்கும் போலீசார் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வெளியில் செல்ல அரசு வழிவகுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பெண்களின் முக்கியத்துவத்தையும், பெண்கள் எதிர்கொள்ளும் விஷயங்கள் குறித்தும், ஆவண படங்கள், பாடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாலியல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி : ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
