×

மைசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு

புதுடெல்லி: மைசூர் பருப்புக்கு 10 சதவீத இறக்குமதி வரியை ஒன்றிய அரசு விதித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,உள்நாட்டில் மைசூர் பருப்பின் இருப்பை அதிகரிக்க மைசூர் பருப்பு இறக்குமதி செய்வதற்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல் மஞ்சள் பட்டாணியின் வரியில்லா இறக்குமதி இந்த ஆண்டு மே 31 வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், மார்ச் 8 முதல் பயறு வகைகளுக்கு 5 சதவீத அடிப்படை சுங்க வரி மற்றும் 5 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

The post மைசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Mysore ,dal ,New Delhi ,Union government ,Union Finance Department ,Mysore dal ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிவு..!!