- பள்ளிப்பட்டு
- அமைச்சர்கள்
- பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி
- பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய தி.மு.க.
- முதல் அமைச்சர்
- நகரி சாலை
- பள்ளிப்பட்டு முதலமைச்சரின்
- தின மலர்
பள்ளிப்பட்டு: முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டது. நகரி சாலையில் காவல் நிலையம் அருகில் மார்ச் 1ம் தேதி தொடங்கிய கிரிக்கெட் போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு 8 நாட்களாக விளையாடி வந்தனர். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அரக்கோணம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு முதல் இடம் பிடித்த அரக்கோணம் அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பை வழங்கினார்.
இரண்டாம் இடம் பிடித்த கல்லாமேடு அணிக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளிப்பட்டு பேரூர் பொறுப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பத்மநாபன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலீல், பள்ளிப்பட்டு பேரூர் திமுக நிர்வாகிகள் சிரஞ்சீவி, முரளி, மோகன்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் திவாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பள்ளிப்பட்டில் முதல்வர் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.
