மாதவரம்: சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: அண்ணாநகரில் உள்ள தேவாலயத்துக்கு தினமும் செல்லும்போது 33 வயது மதிக்கத்தக்க வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த நிலையில், என்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி என்னிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திடீரென்று என்னிடம் பேச மறுக்கிறார்.
அவரை போனில் தொடர்புகொண்டு பேசியபோது என்னை அவமானப்படுத்தி பேசினார். பின்னர் நேரில் சந்தித்து என்னை திருமணம் செய்யும்படி கூறியபோது, என்னை அவமதித்து திருமணம் செய்ய மறுத்ததுடன், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள் என மிரட்டி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து காதலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருமணம் செய்வதாக ஏமாற்றிய காதலன் மீது இளம்பெண் புகார்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.
