- படகு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- திமுக
- சோழிங்கநல்லூர் கிழக்கு
- சென்னை தெற்கு மாவட்டம்
- உத்தந்தி
- ஊர்குப்பம்
- தின மலர்
சென்னை: சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194வது வட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை ஒட்டி, உத்தண்டி முதல் ஊர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராம மக்கள் பங்கேற்ற படகு போட்டி ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்றது. வட்ட செயலாளர் எஸ்.கர்ணா, 194வது மாமன்ற உறுப்பினர் விமலா கருணா ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு படகு போட்டியை தொடங்கி வைத்து, போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்த கொட்டிவாக்கம் மீனவ கிராமத்தை சேர்ந்த மோகன், கண்ணன் ஆகியோருக்கு இன்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகும், 2ம் இடத்தைப் பிடித்த ஈஞ்சம்பாக்கம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வீரன், மோகன் ஆகியோருக்கு பைபர் படகும், 3ம் இடத்தை பிடித்த ஈஞ்சம்பாக்கம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, இம்மானுவேல் ஆகியோருக்கு சிறிய பைபர் படகும் மீன் வலையும் வழங்கி பாராட்டினார். பின்னர் நலத் திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மண்டலக் குழு தலைவர்கள் மதியழகன், எஸ்.வி.ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, பாலவாக்கம் விஸ்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் இரண்டு நாட்களுக்கு முன்பு திருவாரூர் பகுதியில் சுற்றுப்பயணம் சென்றபோது மருதவன்சேரி என்ற பகுதியில் என்னுடைய காரை தாய்மார்கள் மறித்து அங்கு இருக்கக் கூடிய டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
உடனே அந்த கடையை இழுத்து மூடினோம். இதுபோன்ற பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் தீர்க்கப்படும். ஏனெனில் இது மகளிருக்கான ஆட்சி. மீனவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மீனவர்கள் நல வாரியத்தினுடைய உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைகிறபோது அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண தொகையை ரூ. 25 ஆயிரமாக உயர்த்தியதும், மீன்பிடி படகுகளுக்கு 3 வருடத்திற்கு ஒருமுறை உரிமம் பெற்றால் போதும் என்றும் உத்தரவிட்டவர் முதல்வர். இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி 13 மீனவ கிராமங்கள் பங்கேற்ற மாபெரும் படகு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
