×

மக்களவையில் நிதிப்பதிவு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்: ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய திருமாவளவன்

சென்னை: மக்களவையில் நிதிப்பதிவு தொடர்பாக விவாதம் நடத்த கோரி விசிக தலைவர் திருமாவளவன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் அனுப்பியுள்ள ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் விவரம்: மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க 16 வது நிதி குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி செஸ் போன்றவற்றால் மாநிலங்களின் வருவாய் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி பகிர்வை குறைக்க நினைப்பது நியாயம் இல்லை. எனவே மக்களவையில் நிதிப்பதிவு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களவையில் நிதிப்பதிவு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும்: ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கிய திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Thirumavalavan ,Chennai ,Vishwakarma ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...