×

சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு

சென்னை: சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளது. இளையராஜாவின் முதல் சிம்பொனி நிகழ்ச்சி லண்டனில் உள்ள ஈவென்ட் அப்பல்லோ அரங்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவுடன் அரங்கேற்றம் செய்யப்பட்ட “வேலியண்ட்” சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர்.

இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவர் லண்டனில் இருந்து சென்னை திரும்புகிறார். அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளது. தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க உள்ளார்.

The post சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு அரசு சார்பில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Ilayaraja ,Chennai ,London ,Event Apollo ,Royal Philharmonic Orchestra ,
× RELATED திருப்பரங்குன்றம் சுல்தான்...