சிட்னி: ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியை சேர்ந்தவர் பாலேஷ் தன்கர்(43). இந்திய சமூகத்தை சேர்ந்த தலைவரான இவர் போலியான வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டுள்ளார். வேலை தேடி வரும் இளம்பெண்களை தனது வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் பாலியல் பலாத்காரத்தை வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். பாலேஷினால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும் 21 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் கொரியாவை சேர்ந்தவர்கள். பாலியல் வன்கொடுமையின்போது ஐந்து பெண்களும் மயக்கத்தில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு 5வது பெண்ணை தன்கர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பின்பு அவரது வீட்டை சிட்னி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
இதில் பாலியல் பலாத்கார போதைப்பொருட்கள், கடிகாரம் போன்ற வீடியோ ரெக்காடர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ம் ஆண்டு ஒரு நடுவர் மன்றம் 39 குற்றங்களில் அவர் குற்றவாளி என கண்டறிந்தது. இதில் 13 குற்றச்சாட்டுக்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டாகும். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் பாலேஷ் தன்கருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் 30 ஆண்டுகள் பரோல் இல்லாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.
The post போலி வேலைவாய்ப்பு விளம்பரம் மூலம் ஆஸி.யில் 5 பெண்களிடம் அத்துமீறிய இந்தியருக்கு 40 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.
