×

பெண்கள் வன்கொடுமைக்கு ஆதரவளித்து தவெக பேனர்: வேலூர் மகளிர் தின விழாவில் அதிர்ச்சி

வேலூர்: சர்வதேச மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்காக அங்கு வைத்திருந்த டிஜிட்டல் பேனரில், ‘தவறிய’ என்பதற்கு பதிலாக ‘தவரிய’ என்றும், ‘கண்டித்து’ என்பதற்கு பதிலாக ‘கன்டித்து’ என்றும் எழுத்துப்பிழைகள் காணப்பட்டது.

அதேபோல் வேலூர் விருதம்பட்டில் ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட பேனரில், ‘We Stand For Women Harassement’ (நாங்கள் பெண்கள் வன்கொடுமைக்கு ஆதரவாக நிற்கிறோம்) என்ற வாசகத்துடன் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இந்த பேனரில் சிலர் கையெழுத்து போட்டனர்.

மகளிர் தினத்தில் பெண்கள் வன்கொடுமைக்கு ஆதரவு தெரிவித்து தவெக பேனர் வைக்கப்பட்டு, ஆதரவளித்து சிலர் கையெழுத்திட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வாசகத்துடன் கூடிய பேனரை, சிலர் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலர் கண்டனங்கள் தெரிவித்ததும், அந்த பேனர் அகற்றப்பட்டது.

The post பெண்கள் வன்கொடுமைக்கு ஆதரவளித்து தவெக பேனர்: வேலூர் மகளிர் தின விழாவில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Shock ,Vellore Women's Day ,Vellore ,International Women's Day ,Vellore Collector ,Shock at ,Dinakaran ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...