மதுரை, மார்ச் 8: மதுரையை சுற்றுலா நகரமாக அறிவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்லூர் ராஜூ கோரிக்கை விடுத்துள்ளார். மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முன்னாள் எம்எல்ஏ சரவணன், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில், செல்லூர் ராஜூ பேசும்போது, ‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மதுரை தூங்கா நகரமாக பெயர் பெற்றது.
இப்பகுதியை சுற்றி ராமேஸ்வரம், கீழடி அகழ்வாராய்ச்சி மையம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. இருப்பினும் மதுரையை சுற்றுலா தலங்கள் பட்டியலில் சேர்க்காததால், இங்குள்ள விமான நிலையம் முழுவீச்சில் இயங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசு மதுரையை பொழுது போக்கு சுற்றுலா தலங்களின் பட்டியலில் இணைக்க வேண்டும்’’ என்றார்.
The post மதுரையை சுற்றுலா நகராக்க கோரிக்கை appeared first on Dinakaran.
