×

திமுக சார்பில் தமிழகமெங்கும் தண்ணீர்-நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழகமெங்கும் “தண்ணீர் – நீர்மோர் பந்தல் அமைக்க திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடைகால வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி, மார்ச் மாத துவக்கத்திலேயே வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக மக்களை இக்கோடைக் கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர், கழகத் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் – மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனைச் சந்திப்புகளிலும் – சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்.
மாவட்ட – மாநகர – ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்ட – கிளைக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கோடை காலம் முழுவதும் இத்தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட, தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திமுக சார்பில் தமிழகமெங்கும் தண்ணீர்-நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்: தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Tamil Nadu ,Chennai ,DMK Leadership ,
× RELATED கேரள உள்ளாட்சி தேர்தலில் பாஜ தனது...