×

ஐநா அணு ஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்: ஜப்பான் அறிவிப்பு

டோக்கியோ: ஐநாவின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு கடந்த 2017ம் ஆண்டு ஒப்புதல் கிடைத்தது. இது 2021ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இரண்டாம் உலகப்போரின்போது ஐப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதேபோன்று மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக ஐநா நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ஐநாவின் அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தம் குறித்த மாநாடு அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாது என்று ஜப்பான் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவையின் தலைமை செயலாளர் கூறுகையில், ‘‘ மாநாட்டில் கலந்து கொண்டால் அது ஜப்பானின் அணுசக்தி தடுப்பு கொள்கை தொடர்பாக அமெரிக்காவுக்கு தவறான தகவலை அனுப்புவதாகிவிடும்\\” என்று தெரிவித்துள்ளார்.

The post ஐநா அணு ஆயுத தடை ஒப்பந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டோம்: ஜப்பான் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UN Nuclear Weapons Prohibition Treaty Conference ,Japan ,Tokyo ,World War II ,United States ,Hiroshima ,Nagasaki… ,Dinakaran ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு...