×

அந்தமானில் மோசமான வானிலை 162 பயணிகளுடன் மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

சென்னை: அந்தமானில் மோசமான வானிலை காரணமாக அந்தமான் நோக்கி சென்ற விமானம், சென்னை திரும்பியது.சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.40 மணியளவில் 162 பயணிகளுடன் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. விமானம் அந்தமான் வான்வெளியை நெருங்கியபோது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால், விமானம் தரையிறங்க முடியவில்லை.

இதையடுத்து சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. விமானத்தில் இருந்த 162 பயணிகளும் இதனால் அவதி அடைந்தனர். வானிலை சரியானதும் மீண்டும் விமானம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

The post அந்தமானில் மோசமான வானிலை 162 பயணிகளுடன் மீண்டும் சென்னை திரும்பிய விமானம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Andaman ,Indigo Airlines ,Chennai airport ,Andaman… ,
× RELATED தமிழ்நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு...