×

பெண்களை கொச்சைப்படுத்தி பேச்சு சீமானை துடைப்பத்தால் அடித்து விரட்ட மகிளா காங்கிரஸ் தயார்: சையத் அசினா பரபரப்பு அறிக்கை

சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் சையத் அசினா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பெண்களின் கற்பை சீர்குலைத்து அதை பொது வெளியில் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் கேடுகெட்ட சீமான், நாம் தமிழர் கட்சி தலைவராக தமிழகத்தில் வலம் வந்து பெண்களை கொச்சைப்படுத்துவதும், சீமானை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து சீமான் மீது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிட சென்ற காவல் அதிகாரிகளை குண்டர்கள் கொண்டு தகராறு செய்ய வைத்ததோடு மட்டுமல்லாமல் மக்களால் குறிப்பாக மகளிரின் வாக்குகளால் வெற்றி பெற்று ஆட்சியமைத்த தமிழக முதல்வரையே மிரட்டும் தொனியில் கொக்கரிக்கும் சீமானை வன்மையாக கண்டிக்கிறோம்.

வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளை பச்சிளம் தென்னங்கீற்றால் ஓலை பின்னி அதில் அமர வைத்து பாதுகாத்த தமிழ் பண்பாட்டினை கேவலப்படுத்தி பேசிய காமுகச்சீமானை கண்டித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் அதே தென்னங்கீற்றால் தயாரிக்கப்பட்ட துடைப்பக்கட்டையால் அடிக்க தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தயாராக இருக்கிறது. தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சீமானை துடைப்பக்கட்டையால் தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெண்களை கொச்சைப்படுத்தி பேச்சு சீமானை துடைப்பத்தால் அடித்து விரட்ட மகிளா காங்கிரஸ் தயார்: சையத் அசினா பரபரப்பு அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Mahla ,Congress ,Syed Asina ,Chennai ,Tamil Nadu Women's Congress ,President ,Seeman ,Tamil Party ,Tamil Nadu ,Mahla Congress ,Seiman ,
× RELATED ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார...