- திமுக இளைஞர் ஆலோசனைக் கூட்டம்
- Uthukottai
- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் சங்கம்
- நகர்ப்புறம், பேரூர்
- Periyapalayam
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- கே.வி. லோகேஷ்
- தின மலர்
ஊத்துக்கோட்டை, மார்ச் 1: பெரியபாளையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சத்தியவேலு, ஜான் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, குணசேகரன், வெங்கடாசலபதி, கன்னிகை ஸ்டாலின், மாவட்ட அவைத்தலைவர் பகலவன், துணைச்செயலாளர் உமா மகேஸ்வரி, எம்எல்.ரவி, அன்புவாணன்,
ஆரணி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை அமைப்பாளர்கள் சங்கர், மோகன்பாபு, யுவராஜ், ஒன்றிய அமைப்பாளர் ராஜா, லோகேஷ், அசோக்குமார், கார்த்திக், சுந்தர், தினேஷ், சரத் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மார்ச் 1ம் தேதி(இன்று) முதல்வரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் வக்கில்கள் சீனிவாசன், முனுசாமி, அப்புன், விமல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
