அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் எட்வின், பூங்கொடி தம்பதிக்கு ராபர்ட், ஜோசப், மோசஸ் என 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் ரவுடிகளாக வலம் வந்தனர். ராபர்ட்டுக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது 2 கொலை வழக்கு உள்ளிட்ட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு, அன்னை சத்யா நகர் முதல் தெருவில் செல்போனில் ராபர்ட் பேசி ெகாண்டிருந்தபோது பைக்கில் வந்த 6 பேர், அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ராபர்ட் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்ிதுபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் ராபர்ட்டின் கூட்டாளி கோகுல் என்பவரை முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி லோகு கொலை செய்தார். இதனால் லோகுவுக்கும் ராபர்ட்டுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த லோகு திட்டமிட்டு ராபர்ட்டை படுகொலை செய்தது தெரியவந்தது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். நேற்றுமுன்தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராபர்ட்டை கொலை செய்த வீடியோவை, கொலையாளிகள் வெளியிட்டனர்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை அயனாவரம் பகுதியை சேர்ந்த ரவுடி லோகு (எ) லோகுராஜ், அவரது கூட்டாளிகள் சங்கர், தீபக், சிலம்பரசன், வெங்கட் மோகன்லால் ஆகியோரை கைது செய்தனர். ரவுடி ராபர்ட்டுக்கும் தனக்கும் 5 வருடங்களாக முன் விரோதம் இருந்து வந்தது. ராபர்ட் என்னை கொல்வதற்கு முன் நான் முந்திக்கொண்டு, அவரை கொலை செய்தேன்” என லோகு வாக்குமூலம் அளித்துள்ளார். என கூறியுள்ளார்.
The post ரவுடி கொலையில் 6 பேர் கைது முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.
