- அண்ணாமலையார் கோவில் தீமிதி திருவிழா
- Uthukkottai
- சென்னங்கரணி
- உண்ணாமூலையம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவில்
- சிவராத்திரி
ஊத்துக்கோட்டை, பிப். 28: ஊத்துக்கோட்டை அருகே, சென்னங்காரணி கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உன்னாமுலையம்மன் உடனுரை அண்ணாமலையார் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 2 வருடத்திற்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோயிலில், சிவராத்திரியை முன்னிட்டு 2ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஆரணியாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர், ஆரணியாற்றில் இருந்து சிவபக்தர்கள் புடை சூழ அம்மையப்பர் திருக்கோயிலுக்கு புறப்பாடு நிகழ்ச்சியில், பச்சை ஆடை அணிந்த 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். பின்னர், உற்சவரான உன்னாமுலையம்மன் உடனுரை அண்ணாமலையார் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, அம்மையப்பருக்கு நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அண்ணாமலையார் சிவபணி அறக்கட்டளை மற்றும் சென்னங்காரணி கிராம மக்கள் செய்திருந்தனர்.
The post ஊத்துக்கோட்டை அருகே அண்ணாமலையார் கோயில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.
