திருவள்ளூர், பிப்.28: திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 247 ஊர்க்காவல் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் பல்பொருள் அங்காடியில் ஊர்க்காவல் படையினருக்கு பொருட்கள் வாங்குவதற்குரிய புதிய அடையாள அட்டைகள் வழங்கும் விழா எஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் எஸ்பி ரா.சீனிவாச பெருமாள் முதற்கட்டமாக 181 ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்களை வாங்குவதற்குரிய அடையாள அட்டைகளை வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட காவலர் பல்பொருள் அங்காடியில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து காவலர் பல்பொருள் அங்காடியிலும் பொருட்களை வாங்கி பயன்படலாம் என எஸ்பி தெரிவித்தார்.
The post ஊர்க்காவல் படையினருக்கு அடையாள அட்டைகள்: போலீஸ் எஸ்பி வழங்கினார் appeared first on Dinakaran.
