- கஸ்டி
- சாம்பியன் கோப்பை
- லாகூர்
- ஆப்கானிஸ்தான்
- ஆஸ்திரேலியா
- தெற்கு
- ஆப்ரிக்கா
- ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை
- குஸ்தி
- சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்
- தின மலர்
லாகூர்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் குரூப் பி பிரிவில் அரையிறுதிக்கு முன்னேற ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் ஆப்கான்-ஆஸ்திரேலியா மோத உள்ளன. ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பங்கேற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவாக மோதி வருகின்றனர்.
லீக் அடிப்படையில் நடைபெறும் இப்போட்டியில் முதல் இரு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், வங்கதேச அணியும் பரிதாபமாக வெளியேறி விட்டன. குரூப் பி பிரிவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோற்றதால் அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டது.
அந்த பிரிவிலிருந்து அரை இறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை 2 போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வி கண்டுள்ள ஆப்கானிஸ்தான் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதுகிறது. இங்கிலாந்து அணிக்கு அளித்தது போல் ஆஸ்திரேலியாவிற்கும் அந்த அணி அதிர்ச்சி வைத்தியம் அளித்தால், சுலபமாக அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை தோல்வியடைந்தால் லீக் சுற்றோடு வெளியேறிவிடும்.
ஆஸ்திரேலிய அணி இரு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 3 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழை காரணமாக கை விடப்பட்டாலோ கிடைக்கும் புள்ளியுடன் அரை இறுதிக்கு சுலபமாக தகுதி பெற்று விடும். ஒருவேளை ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால், இங்கிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு தகுதி பெறும்.
தென் ஆப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியாவைப் போல் 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் 3 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தினாலோ அல்லது மழை காரணமாக கை விடப்பட்டாலோ கிடைக்கும் புள்ளி மூலம் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை தோல்வியடைந்தால் ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தினாலே தென் ஆப்பிரிக்கா தானாக அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும் வாய்ப்புள்ளது.
The post அரையிறுதியில் யார்? 3 அணிகள் குஸ்தி: ஆப்கான்-ஆஸி இன்று பலப்பரீட்சை, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் appeared first on Dinakaran.
