×

மகளிர் பிரிமீயர் லீக் குஜராத் அபார வெற்றி

பெங்களூரூ: மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில், பெங்களூரூவில் நேற்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ மகளிர், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது. பெங்களூரூ அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 10 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்த இடைவெளியில் விக்கெட்கள் சீராக விழுந்தன. கார்த்திகா அகுஜா மட்டும் ஓரளவு தாக்கு பிடித்து 33 ரன்கள் எடுத்தார். ரக்வி பிஸ்ட் 22 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. குஜராத் ஜியாண்ட்ஸ் அணி சார்பில் தனுஜா கன்வார், டியன்ட்ரா டோட்லின் தலா 2 விக்கெட், அஸ்லீக் கார்ட்னர், கஸ்வி கவுதம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ீபின்னர், எளிய இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து வெற்றி பெற்றது. குஜராத் கேப்டன் கார்ட்னர் 31 பந்தில் 58 ரன் (3 சிக்சர், 6 பவுண்டரி) விளாசினார். லிட்ச்பீல்ட் 21 பந்தில் 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். குஜராத் அணி பெறும் 2வது வெற்றி இது.

The post மகளிர் பிரிமீயர் லீக் குஜராத் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Women's Premier League ,Gujarat ,Bengaluru ,Royal Challengers ,Bangalore Women ,Gujarat Giants ,Smriti Mandhana… ,Women's Premier League Gujarat ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…