×

காஷ்மீர்,லடாக் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரி பதிலடி

ஜெனீவா: ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 58வது அமர்வின் ஏழாவது கூட்டம், ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது பாகிஸ்தான் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை கூறியது. பாகிஸ்தான் சட்டம், நீதி மற்றும் மனித உரிமைகள் துறை அமைச்சர் அசம் நசீர் தரார் பேசும் போது,‘‘ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார்.

இதற்கு ஜெனீவாவில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான ஷிட்டிஜ் தியாகி உடனே பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், ‘‘பாகிஸ்தான் தலைவர்கள், அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதிக் கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகளாக எப்போதும் இருக்கும். காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த பகுதிகளில், இயல்பு நிலையை கொண்டுவருவதற்கான இந்திய அரசின் நடவடிக்கைகளின் சாட்சியாகும்’’ என்றார்.

The post காஷ்மீர்,லடாக் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்திய அதிகாரி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,UN Human Rights Council ,Kashmir, Ladakh ,Geneva ,Jammu and ,Kashmir ,India ,Pakistan Law ,UN ,Human Rights Council ,Ladakh ,Dinakaran ,
× RELATED மாணவர் அமைப்புத் தலைவர் சுட்டுக் கொலை:...