×

கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் புதூரில் புதிய காவல் நிலையம்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

கலசபாக்கம், பிப். 27: கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் க.தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எஸ்பி சுதாகர், எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் வாழ்த்துரை வழங்கினர். போளூர் டிஎஸ்பி மனோகரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எ.வ வேலு கலந்து கொண்டு ஆதமங்கலம் புதூர் காவல் நிலையத்தை திறந்து வைத்து பேசியதாவது: திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது மகளிர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டது.

அப்போதுதான் காவலர்களுக்கு ஆணையம் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலீஸ் மானிய கோரிக்கையில் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் ஆதமங்கலம் புதூரில் புதியதாக காவல் நிலையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். அவர் கைப்பட ஆதமங்கலம் புதூரில் புதிய காவல் நிலையம் தொடங்கப்படும் என எழுதி உத்தரவிட்டார். தமிழ்நாட்டில் அப்போது 2 காவல் நிலையங்கள் தான் புதிதாக தொடங்கப்பட்டது. அதில் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் ஆதமங்கலம் புதூரில் தொடங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் கலசபாக்கம் எம்எல்ஏ சரவணன் அதிக கோரிக்கை மனுக்களை வழங்குவது வழக்கம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலசபாக்கம் தொகுதி எம்எல்ஏ கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தொகுதியில் 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கலசபாக்கம் ஒன்றிய திமுக சார்பில் சார்பில் அருணகிரி மங்கலம் கிராமத்தில் இருந்து கிராமத்தில் இருந்து எம்எல்ஏ பெ.சு.தி சரவணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் ஆர்டிஓ பாலசுப்பிரமணியம், பிடிஓக்கள் பாலமுருகன், அண்ணாமலை ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், அண்ணாமலை, ராமஜெயம், ஆரஞ்சி ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் அன்பரசி ராஜசேகரன், தமயந்தி ஏழுமலை, அரசு வழக்கறிஞர் கே.வ மனோகரன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜா பாரதிசண்முகம் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் கடலாடி இன்ஸ்பெக்டர் மணிமாறன் நன்றி கூறினார்.

The post கலசபாக்கம் ஒன்றியம் ஆதமங்கலம் புதூரில் புதிய காவல் நிலையம்: அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : New Police Station ,Kalasapakkam Union Adamangalam Putur ,Minister A. ,Velu ,Kalasapakkam, ,Kalasabakkam Union ,Adamangalam Budur ,Minister ,Kalasapakkam Union of Tiruvannamalai District ,Kalasapakkam Constituency ,Kadaladi Police Station ,
× RELATED ஊர்நாட்டாண்மை கொலை தலைமறைவான 2 பேர்...