×

பாக். போட்டியில் சதம் விளாசியதால் 5 இடத்துக்கு முன்னேறிய விராட் கோஹ்லி


லண்டன்: ஐசிசி ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி ஒரு இடம் முன்னேறி 5ம் இடத்தை பிடித்துள்ளார். ஐசிசி ஆடவர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை புதிய பட்டியல் நேற்று வெளியானது. இதில் இந்தியாவின் அதிரடி பேட்ஸ்மேன் சுப்மன் கில் 817 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானின் பாபர் அஸம் (770 புள்ளி), இந்திய கேப்டன் ரோகித் சர்மா (757 புள்ளி), தென் ஆப்ரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் (749 புள்ளி) ஆகியோர் 2, 3, 4வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லி, பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் அதிரடியாக ஆடி சதம் விளாசியதால் 743 புள்ளிகள் பெற்று 5ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

அந்த இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 717 புள்ளிகளுடன் 6ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தவிர, அயர்லாந்து வீரர் ஹேரி டெக்டார் 7, இலங்கை வீரர் சரித் அஸலங்கா 8, இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் 9, வெஸ்ட் இண்டீசின் சாய் ஹோப் 10வது இடங்களில் மாற்றமின்றி தொடர்கின்றனர். இந்தியாவின் கே.எல்.ராகுல் 2 இடங்கள் உயர்ந்து 15ம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்தின் அதிரடி வீரர் பென் டக்கெட் 27 இடங்கள் உயர்ந்து 17வது இடத்தை பிடித்துள்ளார்.

The post பாக். போட்டியில் சதம் விளாசியதால் 5 இடத்துக்கு முன்னேறிய விராட் கோஹ்லி appeared first on Dinakaran.

Tags : Bagh ,Virat Kohli ,London ,India ,ICC Women ,One ,ICC ,Dinakaran ,
× RELATED இந்தியா ஓபன் பேட்மின்டன் காயத்ரி-ட்ரீஷா வெற்றி வேட்டை