- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர்
- இந்தியா
- இங்கிலாந்து
- மும்பை
- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்
- ஆஸ்திரேலியா
- மேற்கு
- இண்டீஸ்
- இலங்கை
- தென் ஆப்பிரிக்கா
- சச்சின் டெண்டுல்கர்
- தின மலர்
மும்பை: ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்திய நிலையில் நேற்று 2வது போட்டியில் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்தது.
அதிகபட்சமாக டேரன்மேடி 25, டிம் ஆம்ப்ரோஸ் 23 ரன் எடுத்தனர் கேப்டன் மோர்கன் 8 ரன்னில் அவுட் ஆனார். இந்திய பவுலிங்கில் குல்கர்னி 3, அபிமன்யு மிதுன், பவன் நேகி தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் டெண்டுல்கர் 21 பந்தில் 34ரன் எடுத்து அவுட் ஆனார். குர்கீரத் சிங் மான் 35 பந்தில் 63, யுவராஜ் சிங் 14 பந்தில் 27 ரன் விளாச 11.4ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அபார வெற்றி பெற்றது. பவன் நேகி ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று இரவு 7.30மணிக்கு காலிஸ் தலைமையிலான தென்ஆப்ரிக்கா-சங்ககரா தலைமையிலான இலங்கை மோதுகின்றன.
The post சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி.20 தொடர்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா 2வது வெற்றி appeared first on Dinakaran.
