×

கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடியவர் கைது

நித்திரவிளை, பிப்.26: கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் மற்றும் கண்ணனாகம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஆங்கில மருந்துக்கடை தனித்தனியாக நடத்தி வருபவர்கள் ஐயரின் சந்திரன், மோகனன் நாயர். 2 பேரின் கடை பூட்டை உடைத்து மொத்தம் 6500 ரூபாயை கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். இது குறித்து ஐயரின் சந்திரன், மோகனன் நாயர் ஆகியோர் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த விசாரணையில் 2 திருட்டு சம்பவங்களிலும் தொடர்புடையவர் பொழியூர் பகுதியை சேர்ந்த அகின்(26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து நீரோடியில் வைத்து கொல்லங்கோடு போலீசார் அகினை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

The post கொல்லங்கோடு அருகே மருந்து கடைகளில் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kolangod ,NITHIRAVILA ,IERIN CHANDRAN ,MOHANAN NAIR ,KANNANAGAM ,KOLLANGOD ,Dinakaran ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...