×

கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

ஆலந்தூர்: சென்னை கிண்டி பேருந்து நிலையத்தில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2023ம் ஆண்டு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்ற திருச்சியை சேர்ந்த சரவணன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி போது, அவர் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கஞ்சா வைத்திருந்த சரவணனை கைது செய்தனர். அவர் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Alandur ,Guindy ,Chennai ,Saravanan ,Trichy ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...