திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டை, கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). இவர் நேற்றுமுன்தினம் தனது காரில் மருமகள் சித்ரா (26), பேரன் மருதன் (4) ஆகியோருடன் அவசர வேலை காரணமாக பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, திருவள்ளூர் அடுத்த ஒண்டிக்குப்பம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக காரின் பின்னால் மோதியது. இதில் காரில் இருந்த சித்ரா, அவரது மகன் மருதன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதை கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணி மணவாளநகர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சாலை விபத்தில் தாய், மகன் காயம் appeared first on Dinakaran.
