- இந்து முன்னணி
- தாக்குதலில்
- கேரளா
- அம்பத்தூர்
- சுரேஷ் குமார்
- பிள்ளையார் கோயில் தெரு, மண்ணூர்பேட்டை
- திருவள்ளூர்
- MDH சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை
அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (46). இவர் இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு அம்பத்தூர் தொழிற்பேட்டை எம்.டி.எச் சாலையில் இவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த அப்துல் அக்கீம் (52), சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த இவர், கடந்த 2023ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளர் அமீர் அலி ஜின்னா தலைமையிலான தனிப்படை போலீசார், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல் அக்கீமை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: கேரளாவில் சுற்றிவளைப்பு appeared first on Dinakaran.
