×

ரியோ ஓபன் டென்னிஸ் அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் சாம்பியன்

ரியோ டிஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்று வந்த ரியோ ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் ரியோ ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவின் செபாஸ்டியன் பேயஸ், பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டர் முல்லர் மோதினர். இப்போட்டியில் அற்புதமாக ஆடிய செபாஸ்டியன் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். சாம்பியனுக்கு ரூ.3.8 கோடியும், 2ம் இடம் பிடித்த வீரருக்கு ரூ.2.7 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

The post ரியோ ஓபன் டென்னிஸ் அர்ஜென்டினா வீரர் செபாஸ்டியன் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Rio Open Tennis ,Sebastian Champion ,Rio de Janeiro ,Sebastian ,Brazil ,Rio Open Tennis Championship ,Rio de Janeiro, Brazil… ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்