×

உலக ரசிகர்களை ஈர்த்த கமல்ஹாசன்: ஃபிக்கி கருத்தரங்கில் புகழாரம்

ஃபிக்கி (இந்திய வர்த்தம் மற்றும் தொழில்துறை சம்மேளன கூட்டமைப்பு) சார்பில் சென்னையில் 3 நாள் கருத்தரங்கள் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்பட பலர் பங்கேற்றனர். ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு குழுவின் தலைவர் கெவின் வாஸ் (ஜியோஸ்டார் பொழுதுபோக்கு பிரிவு சிஇஓ), மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கில் பேசியது: தென்னிந்திய ஊடகத் துறையின் வளர்ச்சி பிராந்தியத்திலிருந்து தேசியம் வரை, தற்போது உலகளாவிய கவனத்தைப் பெறுவதைக் கண்டு பெருமை அடைகிறேன்.

சினிமா எல்லைகளை தாண்டி உலகளாவிய ரசிகர்களை ஈர்த்தவர் கமல்ஹாசன். “மூன்றாம் பிறை” (இந்தியில் “சத்மா”), “அப்பூ ராஜா,” மற்றும் “சாச்சி 420” போன்ற படங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கடந்து அனைவரையும் ஈர்க்க முடியும் என்பதை நிரூபித்தன.

கொரோனா பிந்தைய காலகட்டத்தில், ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2, மற்றும் காந்தாரா போன்ற தென்னிந்திய படங்கள் இந்தியாவைத் தாண்டி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதால், தென்னிந்திய சினிமா உலக அளவில் கோலோச்சியது. மேலும், “பொன்னியின் செல்வன்” மற்றும் “விக்ரம்” போன்ற தமிழ் படங்கள் கதைகளின் தனித்துவத்தால் தேசிய மற்றும் உலக அளவில் செல்வாக்கைப் பெற்றன. தொலைக்காட்சியும் டிஜிட்டலும் இணைந்து புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

The post உலக ரசிகர்களை ஈர்த்த கமல்ஹாசன்: ஃபிக்கி கருத்தரங்கில் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,FICCI ,Chennai ,Federation of Indian Chambers of Commerce and Industry ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,FICCI Media and Entertainment Committee ,Kevin… ,Dinakaran ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!