×

ஜகார்த்தா நகரம் மிக வேகமாக கடலில் மூழ்கி வருவதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை உருவாகிறது இந்தோசினேசியா!!

ஜகார்தா : இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தலைநகருக்கு நுசான்தாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மிக வேகமாக கடலில் மூழ்கி வருகிறது. இதனால் போர்னியோ தீவிற்கு தலைநகரை மாற்ற கடந்த 2019ம் ஆண்டு அதிபர் விடோடோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பெருந்தொற்றால் இதற்கான நடைமுறை தொடர்வதில் தாமதம் நிலவி வந்தது. இந்த நிலையில் தலைநகரை மாற்றும் சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறியதும் நாடாளுமன்றத்தில் பேசிய திட்டமிடல் துறை அமைச்சர் சுதர்ஷோ புதிய தலைநகர் தேசத்தின் அடையாளமாக திகழும் என்றார். புதிய தலைநகருக்கு நுசான்தாரா என்று அதிபர் ஜோகோ  விடோடோ பெயர் சூட்டியுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய தீவான போர்னியோவில் 2 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தலைநகர் அமைய உள்ளது. …

The post ஜகார்த்தா நகரம் மிக வேகமாக கடலில் மூழ்கி வருவதால் போர்னியோ தீவில் புதிய தலைநகரை உருவாகிறது இந்தோசினேசியா!! appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Borneo ,Jakarta ,Indonesian Parliament ,
× RELATED இந்தோனேசியாவில் கனமழை வெள்ளத்திற்கு 37 பேர் பலி