×

ஆந்திராவுக்கு செல்கிறதா டெஸ்லா கார் ஆலை? சந்திரபாபுநாயுடு முயற்சி

திருமலை: ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு சமீபத்தில் ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் சந்திரபாபுநாயுடு தற்போது டெஸ்லா ஆலையை ஆந்திராவுக்கு கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்குடன், சந்திரபாபுநாயுடுக்கு பழைய நட்பு உள்ளது. இதன் அடிப்படையில், அவர் ஆந்திராவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையைக் கொண்டுவர முயன்று வருகிறார்.

டெஸ்லா இறக்குமதி கார்களை சேமித்து வைப்பதற்கு அதிகளவு இடத்தை ஒதுக்கும் வகையில், ஆந்திர அரசு டெஸ்லாவை கொண்டு வர முயன்று வருகிறது. உற்பத்தி ஆலைகளை பொறுத்தவரை அனந்தபூர் மாவட்டத்தில் சந்திரபாபுவின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட கியா கார் தொழில்துறையை உதாரணமாக கூறி அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை தயாரித்த ஆந்திர பொருளாதார மேம்பாட்டு வாரியம் டெஸ்லாவுடன் கலந்துரையாடலுக்காக களத்தில் இறங்கியுள்ளது.

The post ஆந்திராவுக்கு செல்கிறதா டெஸ்லா கார் ஆலை? சந்திரபாபுநாயுடு முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tesla ,Andhra Pradesh ,Chandrababu Naidu ,Tirumala ,Telugu Desam Party ,Chief Minister ,CEO ,Elon Musk ,Chandrababu ,Naidu ,
× RELATED ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்:...