- மாதவரம், அம்பத்தூர்
- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- மாதவரம்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம்…
- தின மலர்
மாதவரம், பிப்.22: வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்காக வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாதவரம், அம்பத்தூரில் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புறநகர வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் மனைகளுக்கான ஒதுக்கீடு பெற்று கிரையப்பத்திரம் பெறுவதற்காகவும், கிரையப்பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் பட்டா பெறுவதற்காகவும் வருவாய் துறையுடன் இணைந்து, வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்களை நடத்துகிறது. இதில், பொதுமக்கள் தவறாது கலந்துகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். வரும் 24ம் தேதி மாதவரம் தொகுதி பாரதிதாசன் நகர் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக சூரப்பட்டு என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திட்டப்பகுதிக்கு சண்முகாபுரம் திட்டப்பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக குணசேகரன் என்பவரை 9940313831 என்ற எண்ணில் அழைக்கலாம்.
25ம் தேதி மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா நகர் திட்டப்பகுதிக்கு சண்முகாபுரம் திட்டப்பகுதியில் உள்ள அம்மன்கோயில் அருகில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக குணசேகரன் என்பவரை 9940313831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருகம்பாக்கம் தொகுதி எம்.ஜி.ஆர் நகர் திட்டப்பகுதிக்கு அண்ணா மெயின் ரோடு கல்யாண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
26ம் தேதி மாதவரம் தொகுதி புதிய லட்சுமிபுரம் திட்டப்பகுதிக்கு விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக குணசேகரன் என்பவரை 9940313831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அம்பத்தூர் தொகுதி அன்னை சத்யாநகர், எம்.கே.பி நகர் திட்டப்பகுதிக்கு, அருகில் உள்ள கோயிலில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக திவாகரன் என்பவரை 9789816785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருகம்பாக்கம் தொகுதி பழைய விஜயராகவபுரம் திட்டப்பகுதிக்கு, 5வது தெருவில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
27ம் தேதி மாதவரம் தொகுதி லட்சுமிபுரம் காலனி திட்டப்பகுதிக்கு, விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக குணசேகரன் என்பவரை 9940313831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அண்ணாநகர் தொகுதி வெங்கடசாமி நாயுடுபுரம் 1 மற்றும் 2, ஜோதியம்மாள் நகர் 1 மற்றும் 2 திட்டப்பகுதிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்ட அலுவலகம்-3 தா.பி.சத்திரத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக திவாகரன் என்பவரை 9789816785 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருகம்பாக்கம் தொகுதி புது விஜயராகவபுரம் திட்டப்பகுதிக்கு 5வது தெருவில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக கலாவதி என்பவரை 8778546961 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
28ம் தேதி மாதவரம் தொகுதி பாரத் நகர் திட்டப்பகுதிக்கு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இதுதொடர்பாக குணசேகரன் என்பவரை 9940313831 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம், பட்டா பெறுவதற்கு 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாதவரம், அம்பத்தூரில் சிறப்பு முகாம்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.
