- அரவக்குறிச்சி
- சுப்பிரமணி
- 2வது குறுக்கு
- பாரதியார் நகர், வடக்கு காந்திராம், கரூர் மாவட்டம்
- மொட்டையாப்பிள்ளை தோட்டம்
- பெரிய கரியம்பட்டி
அரவக்குறிச்சி, பிப். 21: கரூர் மாவட்டம் வடக்கு காந்திகிராமம் பாரதியார் நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (63). இவர் அரவக்குறிச்சி அருகே உள்ள பெரிய கரியாம்பட்டியில் உள்ள மொட்டையாபிள்ளை தோட்டத்திற்கு இரவு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட போது சுப்பிரமணியை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக சுப்பிரமணியை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார். இது தொடர்பாக சுப்பிரமணியின் மகன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post அரவக்குறிச்சி அருகே பாம்பு கடித்து முதியவர் பலி appeared first on Dinakaran.
