×

பொது இடத்தில் தகராறு 3 பெண்கள் மீது வழக்கு பதிவு

 

வேலாயுதம்பாளையம், பிப்.20: கரூர் மாவட்டம் கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் மணிமேகலை (32) . (இவர் ஆடிட்டர் அலுவலகத்தில் கிளார்க் வேலை செய்து வருகிறார்). அவரது தாய் நிர்மலா( 56 ).இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் மனைவி பேபி ( 42).( இவர் ஹோட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்). என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக தகராறு இருந்து வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி இரு பிரிவினருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மணிமேகலை அவரது தாய் நிர்மலா மற்றும் பேபி என்பவரும் கிழக்குத் தவுட்டுபாளையம் பகுதியில் உள்ள பாதையின் அருகே தகராறில் ஈடுபட்டு மாறி மாறி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இது குறித்து மணிமேகலை வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சுபாஷினி விசாரணை நடத்தினார். போலீசார் நடத்திய விசாரணையில் கிழக்கு தவுட்டுப்பாளையம் பகுதியில் இரு பிரிவினரும் மாறி மாறி தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததும், இதனால் இரு தரப்பினரும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு வீண் சச்சரவு செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மணிமேகலை, நிர்மலா, மற்றும் பேபி ஆகிய மூன்று பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பொது இடத்தில் தகராறு 3 பெண்கள் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Velayudhampalayam ,Periyasamy ,East Thauttupalayam ,Karur district ,Manimekalai ,Nirmala ,Dinakaran ,
× RELATED கரூர் கொங்கு கல்லூரியில் பொங்கல் தின விழா