- மதுரந்தகம் நகராட்சி
- மதுராந்தகம்
- சுமங்கலி நகர்
- வார்டு கவுன்சிலர்
- ஜெர்லின்
- மதுராந்தகம் நகராட்சி…
- நகராட்சி
- தின மலர்
மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி 12வது வார்டு சுமங்கலி நகரில் பூங்கா அமைக்க ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மதுராந்தகம் நகராட்சி 12வது வார்டு சுமங்கலி நகர் பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என மதுராந்தகம் நகராட்சி 12வது வார்டு கவுன்சிலர் ஜெர்லின் ஜோஸ் என்பவர் மதுராந்தகம் நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில், 25.4.2022 ஆண்டு நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் சுமங்கலி நகர் பகுதியில் பூங்கா அமைக்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை இந்த பணி நிறைவேற்றப்படவில்லை. எனவே, இனிவரும் நாட்களில் அதாவது பூங்கா அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் நகராட்சி ஆணையரிடம் வழங்கினார். இதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்தார்.
The post மதுராந்தகம் நகராட்சி 12வது வார்டில் பூங்கா அமைக்க ஆணையரிடம் மனு appeared first on Dinakaran.
