×

ஜப்பான் மாஜி பிரதமர் மீது குண்டு வீசிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் புமியோ கிஷிடா கடந்த, 2023ம் ஆண்டு வகாயமா மீன்பிடித் துறைமுகத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ரியுஜி கிமுரா(25) என்பவர் பைப் வெடிகுண்டை வீசினார்.இந்த குண்டு வெடிப்பில் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். கிஷிடா காயமின்றி தப்பினார்.இந்த தாக்குதலையடுத்து ரியுஜி கிமுரா கைது செய்யப்பட்டார்.

ஜப்பானிய தேர்தல் முறைகள் பிடிக்காததால் பெரிய அரசியல் தலைவரை குறி வைத்தால் பொதுமக்கள் மத்தியில் பெரும் புகழ் கிடைக்கும் என்ற நோக்கில் தான் குண்டு வீசியதாக கூறினார்.கிமுரா வீசிய வெடிகுண்டு சக்தி வாய்ந்தது, எனவே அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கோரினர்.இந்த வழக்கில் ரியுஜி கிமுராவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

The post ஜப்பான் மாஜி பிரதமர் மீது குண்டு வீசிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,Fumio Kishida ,Wakayama fishing port ,Ryuji Kimura ,Dinakaran ,
× RELATED சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு...