- சிங்கப்பெருமாள் கோயில்
- ஒரகடம்
- சென்னை
- அமைச்சர்கள்
- டி. எம். அன்பராசன்
- அமைச்சர்
- மைக்ரோ
- சிறியது
- நடுத்தர தொழில் நிறுவனங்கள்
- ஈ.வி.வேலு
- பொது பணிகள்
- நெடுஞ்சாலைகள்
- சிறுபான்மை துறைமுகங்கள்
சென்னை: சிங்கபெருமாள்கோவில்-ஒரகடம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வலதுபுற பகுதியினை அமைச்சர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில்-ஒரகடம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவு எண்.47க்கு மாற்றாக ரூ.90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் வலதுபுற பகுதியினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்.
அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், ‘‘தமிழகத்தில் தென் பகுதியிலிருந்து 90 சதவிகித மக்கள், இந்த சாலை வழியே தான் பயணிக்கின்றனர். இப்பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதனால், கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையொட்டி, சிங்கபெருமாள்கோவில்-கூடுவாஞ்சேரி வலது புற மேம்பாலத்தினை உடனடியாக திறந்திட முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்னும் நான்கு மாதத்திற்குள் மேம்பால பணி 100 சதவீதம் முடிவுக்கு வந்து, முழுமையாக திறக்கப்படும் பொதுமக்கள் போக்குவரத்து சிரமமின்றி பயணம் செய்யலாம்‘‘ என்றார். இதனைத் தொடர்ந்து, மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை அமைச்சர்கள் திறந்து வைத்து, மேம்பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் டி.பாஸ்கர பாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலை நகர் நகர்மன்ற துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், செங்கல்பட்டு திமுக நகர செயலாளளர் எஸ்.நரேந்திரன், முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சிமன்ற துனைத்தலைவர் கே.பி.ராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post சிங்கபெருமாள் கோயில்-ஒரகடம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரூ.90.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.
