×

சென்னையில் ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்: தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு

சென்னை: பெண்களின் பாதுகாப்பில் தமிழ்நாடு சிறந்து விளங்குகின்ற சூழலில் அதனை கூடுதலாக வலுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ‘சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் விதமாகவும் அரசு மானியமாக ரூ.1 லட்சம் வீதம் 200 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்கி ரூ.2 கோடி செலவில் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் (பிங்க் ஆட்டோ) அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக அரசு தற்போது அரசிதழில் பதிவு செய்துள்ளது. அதில் ‘ஆட்டோ முழுவதும் பிங்க் நிறத்தில் இருக்க வேண்டும், பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருக்க வேண்டும், அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தை கண்காணிக்கும் சாதனம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பிங்க் ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் பொதுமக்கள் அடுத்த 15 நாட்களுக்குள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

The post சென்னையில் ‘பிங்க்’ ஆட்டோ திட்டத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்: தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Social Welfare Minister ,Geetha Jeevan ,Assembly ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...