அம்பத்தூர்: புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஸ்பா மற்றும் சலூன் இயங்கி வருகிறது. இந்த ஸ்பா மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இளம்பெண்களை காட்டி, பாலியல் தொழில் நடப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.அதன்பேரில், கடந்த 15ம் ேததி சம்பந்தப்பட்ட ஸ்பா மற்றும் சலூன் கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சலூன் கடைக்கு சிகை அலங்காரம் செய்ய வரும் முதிவர்கள் முதல் இளைஞர்களுக்கு அழகான இளம்பெண்களை வைத்து சிகை அலங்காரம் செய்வது போல், பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது.
அதைதொடர்ந்து பாலியல் தொழில் செய்த அயனாவரம் சுவாமிநாதன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய வடமாநில இளம்பெண்கள் உட்பட 9 பெண்களை போலீசார் மீட்டனர்.பின்னர் பாலியல் புரோக்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட 9 பெண்களையும் போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்பா மற்றும் சலூன் கடை உரிமையாளரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
The post ஸ்பா சென்டரில் பாலியல் தொழில்: 9 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.
