×

விறகு லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

 

திருப்பூர், பிப்.16: பொள்ளாச்சியில் இருந்து திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்திற்கு விறகு ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று நேற்று காலை புதிய பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கொங்கு மெயின் ரோடு செல்வதற்கு லாரி திரும்பிய போது பாரம் தாங்காமல் லாரி திடீரென நடுரோட்டில் கவிழ்ந்து விழுந்தது. இதனால், ரோட்டில் விறகுகள் அனைத்தும் ஆங்கங்கே சிதறி கிடந்தன.விபத்து காரணமாக திருப்பூர் பி.என்.ரோட்டில் காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் மூலமாக நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்டனர்.பிறகு போக்குவரத்தை சரி செய்தனர்.

 

The post விறகு லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Pollachi ,Banyan ,Kongu Main Road ,Dinakaran ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்