×

ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் கால் இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற ஜப்பான்

கிங்டா: ஆசியா கலப்பு அணி பேட்மின்டன் சாம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டி, சீனாவின் கிங்டா நகரில் நேற்று நடந்தது. இதில், இந்தியா – ஜப்பான் அணிகள் மோதின. முதலாவதாக நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்திய வீரர் துருவ் கபிலா- வீராங்கனை தனிஷா கிராஸ்டோ இணையை, ஜப்பான் வீரர் ஹிரோகி மிடோரிகவா- வீராங்கனை நாட்சு ஸைட்டோ இணை வென்றது.

மகளிர் ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் டொமோகா மியாஸாகி, இந்தியாவின் மாளவிகா பன்ஸோத்தை வென்றார். ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் வீரர் கென்டா நிஷிமோடோவிடம் தோற்றார். இதனால், 3-0 என்ற கணக்கில் காலிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறியது.

The post ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் கால் இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்ற ஜப்பான் appeared first on Dinakaran.

Tags : Japan ,India ,Asian Mixed Team Championship quarter-final ,Qingdao ,Asian Mixed Team Badminton Championship ,Qingdao, China ,Dhruv Kapila ,Tanisha… ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு