×

கலப்பட நெய் விவகாரத்தில் கைதான 4 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை

திருமலை: திருப்பதி கலப்பட நெய் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ ஐதராபாத் பிரிவு இணை இயக்குநர் வீரேஷ் பிரபு தலைமையிலான புலனாய்வு குழு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள போலே பாபா டைரி இயக்குநர்களாகப் பணியாற்றிய விபின் ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணவி டைரி தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா வினய் காந்த் சாவ்லா, திண்டுக்கல் ஏ.ஆர் டைரி நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை வரும் 17ம் தேதி வரை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து திருப்பதி கிளை சிறையில் இருந்த 4 பேரையும் திருப்பதி அலிபிரியில் உள்ள சிறப்பு விசாரணை பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று நேற்று முதல் அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.

The post கலப்பட நெய் விவகாரத்தில் கைதான 4 பேரிடம் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati ,Supreme Court ,CBI Hyderabad Division ,Veeresh Prabhu ,Vipin Jain ,Pomil Jain ,Vaishnavi ,Bole Baba Diary ,Uttarakhand… ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...