- பிரேமலதா
- மதுரை
- சென்னை
- தேமுதிக பொதுச் செயலாளர்
- பிரேமலதா விஜயகாந்த்
- நக்கிரார் தோரணம்
- மட்டுத்தவணி
- ஜேசிபி
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள நக்கீரர் தோரண நுழைவாயிலை அகற்றும்போது தூண் சாய்ந்து மேலே விழுந்ததில் ஜேசிபி ஆபரேட்டர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் செயல்பட்டதால் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. மதுரை மாநகராட்சியின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும்.
The post மதுரையில் தூண் சாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர பிரேமலதா கோரிக்கை appeared first on Dinakaran.
