- பாஜக
- அஇஅதிமுக
- DMK கூட்டணி
- திராவிட
- அமைச்சர்
- ரகுபதி
- சென்னை
- திமுக
- சி வாக்காளர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அரசு
- தின மலர்
சென்னை: பா.ஜ.க., அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுகவின் வாக்குகள் 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக சி ஓட்டர் கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டி அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; பா.ஜ.க., அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என கூறினார்.
மேலும், அதிமுக பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை என்றும், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல்முறையாக அதிமுகவினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்றும் ரகுபதி தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் அதிமுக தொடர்பான அதிருப்தியை தெரிவித்துள்ளார் என்றுதான் கூறினோம்; திமுகவில் இணைவார் என்று கூறவில்லை என அவர் கூறினார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வாக்குகள் 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது என சுட்டிக்காட்டினார். மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரிகள் இல்லை. ஒன்றிய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்திதான் வருகிறோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
The post பா.ஜ.க., அதிமுக சேர்ந்து வந்தாலும் திமுக கூட்டணியை தோற்கடிக்க முடியாது; மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.
