×

விழுப்புரம் அருகே லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய முட்டைகள்: அள்ளிச்சென்ற மக்கள்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கெடாரை சேர்ந்தவர் குணசேகரன்(40). இவர் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து விழுப்புரம் பகுதியில் விற்பனை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் நாமக்கல்லில் இருந்து முட்டைகளை கொள்முதல் செய்து தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் வாகனத்தை ஓட்டியுள்ளார்.நேற்று காலை விழுப்புரம் அருகே அயினம்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற அரசு பேருந்தை சரக்கு வாகனம் முந்திச்செல்ல முயன்றது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் குணசேகரன், ரமேஷ் ஆகியோர் காயத்துடன் தப்பினர். ஆனால் சுமார் 20 ஆயிரம் முட்டைகள் சாலையில் உடைந்து சேதமானது. சாலையில் முட்டைகள் உடைந்து கிடப்பதை பார்த்ததும் பொதுமக்கள் சென்று உடைந்த முட்டைகளை போட்டி, போட்டு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Villupuram ,Gunasekaran ,Kedar ,Namakkal ,
× RELATED தமிழக கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை: 8ம் தேதி முதல் கனமழை