×

திரள்நிதி வாங்கும் சீமானுக்கு வேற என்ன தெரியும்?.. விஜய் கட்சி நிர்வாகி பதிலடி

சென்னை: தவெக மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் சம்பத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊடகவியலாளர்கள் ஒலிவாங்கியை நீட்டிவிட்டால் அண்ணன் சீமான் எதையாவது உளறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட சீமான் இன்னும் எத்தனை ஆண்டுகள் ‘வென்றால் மகிழ்ச்சி,.தோற்றால் பயிற்சி’ என்று நாம் தமிழர் உறவுகளை உசுப்பேத்திக் கொண்டே இருக்கப் போகிறாரோ தெரியவில்லை? திரள் நிதி வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமானுக்கு, திறமையாளர்களின் ஆலோசனைகளை பெறுவது தவறாக தெரிவது ஆச்சரியமன்று.

அண்ணே, நாங்கள் சட்டமன்றத்தில் பேசுவதற்காக அரசியல் செய்கிறோம், நீங்கள் பட்டிமன்றத்தில் பேசுவது தான் அரசியல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் தவெக வெற்றி பெறுவது எப்படி என்று சிந்திக்கிறோம். நீங்கள் தமிழ்தேசிய அரசியலை எப்படி வெற்றி பெறாமல் வைத்திருப்பது என்று சிந்திக்கிறீர்கள். பிரபாகரனிசத்தை முன்வைத்து கட்சி தொடங்கிய நீங்கள் இப்போது சீமானிசத்தில் கொண்டு போய் கட்சியை நிறுத்தியிருக்கிறீர்கள். ஒன்று சொல்லட்டுமா, எங்கள் தலைவர் விஜய் தன் ரசிகர்களை அரசியல் கட்சியின் தொண்டர்களாக உருமாற்றம், செய்து வருகிறார். நீங்கள் உங்கள் கட்சியின் தொண்டர்களை உங்கள் ரசிகர்களாக உருமாற்றம் செய்து வருகிறீர்கள். உங்களோடு என்றும் எங்களுக்கு ஒத்து போகாது அண்ணே…. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post திரள்நிதி வாங்கும் சீமானுக்கு வேற என்ன தெரியும்?.. விஜய் கட்சி நிர்வாகி பதிலடி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Deputy Secretary of State Policy Press ,Sampatkumar ,Annan Seaman ,Dinakaran ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...