×

ஆஸியுடன் முதல் ஓடிஐ: இலங்கை அமர்க்கள வெற்றி

கொழும்பு: இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கொழும்பு நகரில் நேற்று நடந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய அந்த அணி துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்த போதும், கேப்டன் சரித் அசலங்கா சிறப்பாக ஆடி 127 ரன் குவித்தார்.

இதனால், 46 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி, 33.5 ஓவர் மட்டுமே எதிர்கொண்டு, 165 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால், 49 ரன் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

The post ஆஸியுடன் முதல் ஓடிஐ: இலங்கை அமர்க்கள வெற்றி appeared first on Dinakaran.

Tags : Aussie ,Sri Lanka ,Colombo ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.ஓபனில் அதிரடி காட்ட தயாராகும் வீனஸ்