×

அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி காலமானார்


லக்னோ: அயோத்தியில் உள்ள ராமஜென்மபூமி கோயிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார். உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலின் தலைமை பூசாரியாக இருந்தவர் சத்யேந்திர தாஸ்(83). இவர் கடந்த 3ம் தேதி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது ஆன்மீக உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி காலமானார் appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Mahant Satyendra Das ,Ram Janmabhoomi temple ,Ayodhya ,Satyendra Das ,Ram temple ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி...