×

தேமுதிக கொடி நாள் தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம்

சென்னை: தேமுதிக 25ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு மாணவர், இளைஞர், பெண்கள், முதியவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: தேமுதிக வெள்ளி விழா 25ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டம், பகுதி, நகரம் ஒன்றியம், பேரூர், ஊராட்சி கிளைகள், அனைத்து கிராமப்புற கிளை பகுதிகளில் பழைய கொடிகளை அகற்றி, புதிய கொடிகளை ஏற்றி, கட்சி கொடிகள் இல்லாத இடத்தில் புதுக் கொடிகளை ஏற்றிட வேண்டும்.

விஜயகாந்தின் கோட்பாட்டின் படி “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே” என்ற அடிப்படையில் நம்மால் முடிந்த உதவிகளை மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மற்றும் முதியவர்களுக்கு செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இந்நாளிலே சூளுரை ஏற்று, நமது கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட அனைவருமே உறுதிமொழி ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தேமுதிக கொடி நாள் தொண்டர்களுக்கு பிரேமலதா கடிதம் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,DMDK Flag Day ,Chennai ,DMDK Silver Jubilee ,Dinakaran ,
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...